Wednesday, July 18, 2012

தனி ஈழம் என்ற கோரிக்கையை தி.மு.க. கைவிடவில்லை



தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பான டெசோ அமைப்பை மீண்டும் தொடங்கியிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனி தமிழ் ஈழம் அமைவதே குறிக்கோள் என்று அறிவித்தார். 


இக்கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 12ம் தேதி சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, தனி ஈழ கோரிக்கைக்காக அழுத்தம் திருத்தமாக சொல்லி போராட்டம் நடத்தும் எண்ணம் இப்போது இல்லை என்றும், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் பசியைப் போக்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளுக்காகவே ‘ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு மாநாடு' என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

இந்த மாநாட்டில் தனி ஈழம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்றும், தனி ஈழ கோரிக்கையை கருணாநிதி கைவிட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதற்கு பதில் அளித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனி ஈழம் என்ற கோரிக்கையை தி.மு.க. கைவிடவில்லை என்று உறுதிபட கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘தனி ஈழம் என்ற கோரிக்கை எனது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. நான் இலங்கையில் மீதமிருக்கும் தமிழர்களை காப்பது முதல் கடமை என்று கூறினேன். இதனால் தனி ஈழ கோரிக்கை கைவிட்டதாக அர்த்தம் இல்லை. இவ்விஷயத்தில் சிலர் குழப்பத்தை உருவாக்க முயற்சித்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment