இரண்டாம் இணைப்பு படங்கள்
பூநகரி மகாவித்தியாலயத்தில் முத்தமிழ் விழாவும் ''பூ விழை " என்ற சஞ்சிகை வெளியீடும் 2012 என்ற நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது நிகழ்வின்போது பிரதம விருந்தினர்கள் வாடியடிச்சந்தியில் உள்ள முனியப்பர் ஆலயத்தில் இருந்து பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்
இதன் பின் விருந்தினர் வரவேற்பு நடைபெற்றது தொடர்ந்து கொடிஏற்றல், மங்கலவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து , ஆசி உரை, வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமை உரை, ''பூ விழை '' சஞ்சிகை வெளியீட்டு உரை திரு. சி. விசுவாசம் அதிபர் கிளி மட்டுவில்நாடு அ.த.க பாடசாலை அவர்களால் நிகழ்த்தப்பட்டது. முதற்பிரதி, சிறப்புப்பிரதி, மதிப்பீட்டு உரை திரு. க. தர்மராசா ஓய்வு பெற்ற விரிவுரையாளர் கல்வியல்க் கலூரி யாழ்ப்பாணம் நிகழ்த்தினார். பதிலுரை செல்வி. சி.சுகிர்தா இதழாசிரியர் நிகழ்த்தினார். தொடர்ந்து செம்மொழிபாடல், கவிதை.குழுநடனம்,நாட்டார் பாடல், தமிளிசைச்சங்கமம், பேச்சு,கவியரங்கு,தனியாள் நடிப்பு, நாடகம்,சான்றிதழும் பரிசு வளங்களும், பொறுப்பாசிரியர் உரை, அதிபர் உரை, சிறப்பு விருந்தினர் உரை,முதன்மை விருந்தினர் உரை, நன்றிஉரை, பாடசாலைக்கீதம் போன்ற நிகழ்வு இடம்பெற்றது.
No comments:
Post a Comment