Saturday, December 1, 2012

மட்டகளப்பில் சூரியபகவான் சிலையானது மேற்கு பக்கம் நோக்கி திரும்பியுள்ள அதிசய நிகழ்வு


மட்டக்களப்பில் நவக்கிரக ஆலயத்தில் அமைந்துள்ள சூரியபகவான் சிலையானது மேற்கு பக்கம் நோக்கி திரும்பியுள்ள அற்புத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள சூரிய பகவானின் சிலையே இவ்வாறு திரும்பியுள்ளது.

நேற்றிரவு ஆலய கதவினை மூடிவிட்டுச் சென்ற ஆலய நிர்வாகி ஒருவர் இன்று காலை ஆலய கதவுகளை திறந்து வழமை போன்று விக்கிரங்களை கழுவி வருகையில் இந்த அற்புதத்தை கண்டுள்ளார்.
ஆலயதின் கிழக்கு திசையினை நோக்கியிருந்த குறித்த சிலையானது மேற்கு பக்கமாக 30 பாகையளவில் திரும்பியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த அற்புத காட்சியை காண பெருமளவான அடியார்கள் ஆலயத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment