Wednesday, July 18, 2012

இலங்கைப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழீழம் உருவாவதை விரைவில் காண வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காகத்தான் டெசோ மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் கருணாநிதி அறிவித்து 40 நாள்கள் ஆவதற்குள் அவர் பேச்சில் பொங்கி வந்த கோபம் மறைந்துவிட்டது. டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று இப்போது கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஓர் அங்கமாக விளங்கும் திமுக செய்ய வேண்டியதைச் செய்து ஈழத் தமிழர்களின் துயரைத் துடைக்காமல் இப்போது முச்சந்தியில் மாநாடு நடத்தி துயரைத் துடைக்கப் போவதாகக் கூறுவது பித்தலாட்டம். கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment