யாழ். ஸ்ரான்லி வீதியை சிங்கப்பூரில் அமைந்துள்ள வீதியின் தரத்திற்கு மாற்றுவதற்கு யாழ். மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
நேற்றைய தினம் (17) யாழ் வணிகர் கழகத்தின் ஒத்துழைப்புடனும் யாழ் ஸ்ரான்லி
வீதி கடை உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் அவ்வீதியில் நடைபாதை அமைத்தல்
மற்றும் வடிகால் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் வணிகர் கழகத்தில்
நடைபெற்றது.
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்.
ஸ்ரான்லி வீதிப் பகுதியில் உள்ள கடைகளுக்கு இடையூறு இன்றி வாகனங்களை
தரித்து விடுவதற்கும் பாதசாரிகளின் அசௌகரியமின்றி போக்குவரத்தில்
ஈடுபடுவதற்காகவும் இவ்வீதியை அழகுபடுத்துவதற்கும், திருத்த வேலைகள்
மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இப்பகுதியில் அமைந்துள்ள கடை
உரிமையாளர்களுடன் வணிகர் கழகமும் யாழ் மாநகர சபையும் இணைந்து கலந்துரையாடலை
மேற்கொண்டனர்.
தற்போது கார்பட் வீதியாக இருக்கும் ஸ்ரான்லி வீதியில் இரு புறமும் மணல்
காணப்படுவதனால் வெயில் காலங்களில் மணல் காற்றினால் அள்ளி வீசப்படுகின்றது.
மழை காலத்தில் வெள்ளம் கடைகளுக்குள் செல்கின்ற காரணத்தினால் கார்பட்
வீதியில் இருந்து 11 அடிக்கு வாய்க்கால் அமைக்கப்பட்டும் மணல் வீதிக்கு
தார் போட்டு செப்பனிடுவதற்கும் கடை உரிமையாளர்களிடம் கருத்துக்கள்
கேட்கப்பட்டன.
அதன் போது காபட் வீதியாக மாற்றப்பட்டுள்ள குறித்த வீதி மேலும் திருத்த
வேலைகள்; மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளையும்
மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் பிரணவன் தெரிவித்தார். இவ்
வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு வர்த்தகர்கள் முன்னுரிமை வழங்கினால் மிக
துரித கதியில் வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைள்
மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா
தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் யாழ். வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் தொழிலதிபர்
இ.ச.பேரம்பலம் யாழ். மாவட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்
உட்பட யாழ் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment