தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில்
கிழக்கு மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களை ஒதுக்குவது தொடர்பாக நேற்றுவரை
இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அக்கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, ஈ.பி. ஆர். எல். எப்.,
டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கிழுக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு 10
வேட்பாளர்களும் ஏனைய நான்கு கட்சிகளுக்கும் 4 வேட்பாளர்களும்
ஒதுக்கப்பட்டன. இருந்தும் ஏனைய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை
அடுத்து அந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்க தமிழரசுக் கட்சி இணக்கம் தெரிவித்து
இருந்தும் ஏனைய கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் வேட்பாளர்கள்
ஒதுக்கப்படுவதில் இன்னும் இழுபறி நிலை காணப்படுவதாகவும் அக்கட்சி
வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விடயம் தொடர்பாக இரா. சம்பந்தன் எம்.பி.யிடம் கேட்ட போது பிரச்சினைக்கு இன்று அல்லது நாளை இணக்கம் காணப்படுமென்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment