வடக்கு கிழக்கு அவசியம் ஏற்படும் போது மட்டும் இராணுவத்தினர் வெளியில்
வந்து செயற்பட வேண்டுமென்று தான் உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை
இல்லாதொழித்த பெருமை எமது படை வீரர்களையே சாரும். அத்தகைய சாதனை
செய்தவர்கள் இன்று மக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதனை
ஒருசிலரால் தாங்கிக் கொள்ள முடியாம லிருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரி
வித்துள்ளார். இந்தியாவின் பிரபல நாளேடான இந்து பத்திரிகைக்கு அளித்த
பேட்டியொன்றிலேயே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவம் பொதுமக்களின் சகல செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டு இருக்கிறது
என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, வட
மாகாண சபைத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் நடத்தப்படும். அனேகமாக நாம்
2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்தலை நடத்துவோம் என்றும்
குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நாம் திட்டமிட்ட
அடிப்படையில் நெறியாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்னரே கடைசி தடவையாக வடமாகாணத்தின் வாக்காளர் இடாப்பு
தயாரிக்கப்பட்டது. இதனை வைத்துக் கொண்டு இப்போது வடமாகாணத்தில்
வாக்களிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது என்பதை தீர்மானிக்க
முடியாதிருக்கிற தென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதற்கு
அடுத்தபடியாக அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் பிரச் சினையாக புனர்வாழ்வு
மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகளுள்ளன.
இதனை சர்வதேச உதவியுடன் விரைவில் பூர்த்தி செய்ய முடியுமென நாம் எதிர்
பார்க்கிறோம். வடபகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கும் நாம் தீர்வை
ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருக் கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையை கொடுக்க வேண்டுமென்ற கேள்விக்கு தேர்தலை
நடத்த வேண்டுமென்பது பிரதான காரணியாக அமையும். 1987ம் ஆண்டில் இலங்கைஇந்திய
ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட உடனேயே தமிழர்களின் இந்தப் பிரச்சினையை நாம்
தீர்த்து வைத்திருக்கலாம் என்று ஜனாதிபதி கூறினார். 13வது திருத்தத்தில்
அதிகார பரவலாக்கலுக்கான ஒரு பிரிவு இருந்தது. இருந்தாலும் இந்தத் திருத்தம்
நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்க
ப்பட்டது. இதனால் வட மாகாணத்தை தவிர மற்றைய மாகாணங்களுக்கு மாகாண சபைகள்
ஏற்படுத்தப்பட்டன.
No comments:
Post a Comment