தமிழ் மக்கள் கடந்தகால யுத்தங்களின் போது மிகப் பெரும்
விலைகொடுத்திருந்தாலும் நீண்டகாலமாக யுத்த சூழ்நிலைக்குள் அடைபட்டு இருந்த
எங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுவித்தவர் என பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தெரிவு
செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்விலேயே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
சமுர்த்தித்திட்டம் யுத்த சூழ்நிலைகள் காரணமாக வட இலங்கையில்
ஆரம்பிக்கப்படவில்லை. எனினும் 2000 ஆம் ஆண்டளவில் நாம் இதை நடைமுறைக்கு
கொண்டு வந்தோம்.
சமுர்த்தி வேலைத்திட்டத்திற்குள் மேலதிகமாக 8 ஆயிரம் குடும்பங்கள்
உள்வாங்கப்படவுள்ளனர்.
எனினும் இத்திட்டத்தினை நம்பி கையேந்தி நிற்காது வேறு தொழில் முயற்சிகளில்
ஈடுபட முன்வர வேண்டும். இத் திட்டத்தில் 71 பேர் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான
காசோலையை ஒரு நல்ல நாளில் வழங்குவதன் நோக்கத்தில் தான் ஜனாதிபதி
பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவு செய்யும் இந்த நாளில் வழங்குகின்றோம் என அவர்
மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் சிவசிறி ,யாழ்.அரச
அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் பிரதேச செய லாளர்கள்,
இணைப்பாளர்கள்ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment