இலங்கையில் நிகழ்ந்துள்ள முக்கியமான சம்பவங்கள் உள்ளிட்ட காணாமல்
போகுதல் நிகழ்வுகள் குறித்து ஜெனீவாவில் நேற்று முன்தினம்
முடிவடைந்த தனது
97 ஆவது கூட்டத் தொடரின் போது ஆராயப்பட்டதாக கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது
விருப்பத்திற்கு மாறான நிலையில் காணாமற் போவோர் பற்றி ஆராய்ந்து வரும்
ஐ.நா. வின் செயற்குழு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது குழுவின் அவசர நடவடிக்கை
செயல்முறையின் கீழ் பலவிதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட பதின்மூன்று
பேர் பற்றிய முறைப்பாடுகளையும் 200க்கு மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள்
பற்றியும் குழு தீவிரமாக பரிசீலித்தது. ஆப்கானிஸ்தான், அல்பேனியா,
அல்ஜீரியா, ஆர்ஜென்டீனா, பங்களாதேஷ், பொலாரஸ், பூட்டான், மத்திய ஆபிரிக்க
குடியரசு, கொலம்பியா, கொரிய, ஜனநாய மக்கள் குடியரசு, எகிப்து, ஜோர்ஜியா,
கென்யா, குவைத், லாவோஸ், லிபியா, மெக்ஸிகோ, மொரொக்கோ, மியன்மார்,
பாகிஸ்தான், பேரு ரஷ்யா, சவுதி அரேபியா, ஸ்பெயின், ஸ்ரீலங்கா,
சுவிற்சர்லாந்து, சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து துருக்கி, உஸ்கிஸ்தான்
மற்றும் யேமன் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட அவசர நடவடிக்கை அடங்கலான
சம்பவங்கள் குறித்து ஐந்து பேரடங்கிய சுயாதீன மனித உரிமைகள் நிபுணர்கள்
கூடி ஆராய்ந்தனர்.
ஜெனீவாவில் கடந்த ஒன்பதாம் திகதி தொடக்கம் பதின்மூன்றாம் திகதி வரையிலான
ஐந்து நாள் கூட்டத் தொடரின் போது உடனடியாகத் தலையிடுமாறு கோரும் கடிதங்கள்
அவசர மேன்முறையீடுகள் மற்றும் பொதுவான குற்றச் சாட்டுகளுக்கான பல்வேறு
அரசாங்கங்களிருந்தும் கிடைக்கப் பெற்ற பதில்களும் மேற்படி நிபுணர்
குழுவினால் நுணுகி மேற்படி கூட்டத் தொடரின் போது பெண்கள் மற்றும் சிறுவர்
வலுக்கட்டõயத்தின் பேரில் காணாமல் போகுதல் சம்பந்தமாக பலவந்தமான முறையில்
காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாத்தல் பற்றிய பிரகடனம்
குறித்த வரைபு மட்டத்திலான இரண்டு பொதுவான ஆலோசனைகளும் செயற்குழுவால்
கலந்துரையாடப்பட்டன.
மேற்குறித்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதிலான தடைகள் சம்பந்தமாக
நம்பத்தகுந்த வட்டாரங்களால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும்
நிபுணர்கள் ஆராய்ந்ததுடன் அவை செயல் முறைகள் குறித்த நாடுகளுக்கான மேற்படி
கூட்டத் தொடரின் போது பெண்கள் மற்றும் சிறுவர் வலுக்கட்டாயத்தின் பேரில்
காணாமல் போவது சம்பந்தமாக பலவந்தமான முறையில் காணாமல் போவதிலிருந்து
அனைத்து நபர்களையும் பாதுகாத்தல் பற்றிய பிரகடனம் குறித்த வரைபு
மட்டத்திலான இரண்டு பொதுவான ஆலோசனைகளும் செயற்குழுவால் கலந்துரையாடப்பட்டன.
மேற்குறித்த பிரகடனத்தை நடைமுறைபடுத்துவதிலான தடைகள் சம்பந்தமாக
நம்பத்தகுந்த வட்டாரங்களால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும்
நிபுணர்கள் ஆராய்ந்ததுடன் அவை செயல் முறைகள் குறித்த நாடுகளுக்கான கடந்த
கால மற்றும் உசிதமான விஜயங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும்
கலந்துரையாடினர்.
No comments:
Post a Comment