Sunday, July 29, 2012

முன்னால்போராளிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கைகலப்பு : கெக்கிராவை பகுதியில் இன்று சம்பவம்

இன்று நண்பகல் கொழும்பு அலறிமாளிகைசில் இடம்பெறவிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 2000 பேருக்கான கடன் திட்ட (லோன்) நிகழ்விற்கு அழைத்து வரப்பட்ட வடபகுதியை சேர்ந்த ஐந்து மாவட்டங்களின் முன்னாள் போராளிகள் வந்த பஸ் வண்டிகளில் கெக்கிராவை பகுதியில் வைத்து இராணுவ வீரர்கள் ஏறினர்
இவர்கள் பஸ் வண்டியினுள் இருந்த பெண் போராளிகளின் சட்டைகலினுள் தமது தொலைபேசி இலக்கங்களை எழுதிய கடதாசி துண்ட்டுகளை போட்டனர் இதனை அறிந்த ஆண் போராளிகள் கிளம்பி எழுந்து   இராணுவ வீரர்களை தாக்கினர் இதன் போது இடம்பெற்ற கலகத்தினால் கெக்கிராவைப் பகுதி சிறிது நேரம் பர பரப்பாக இருந்தது பின்பு இராணுவ உயர் அதிகாரிகள் மன்னிப்புக் கோரி போராளிகளை சமாதனப் படுத்தி அலறி மாளிகைக்கு அழைத்து சென்றனர் 

இன்று மதியம் அலறி மாளிகையில் முன்னாள் போராளிகளுக்கான லோன் திட்டம் வழங்கி முன்னாள் போராளிகளுக்கான லோன் திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றார் ஜனாதிபதி மகிந்த இதில் இரண்டாயிரம் போராளிகள் கலந்தது கொள்ளவுள்ளனர்

 இரண்டாம் இணைப்பு............



இன்று மதியம் இரண்டு முப்பது மணியளவில் அலறி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகள் போராளிகள் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த தமிழில் சில நிமிடங்கள் உரையாடியதாகவும் இரண்டாயிரம் பேருக்கு வழங்க இருந்த லோன் ஆயிரத்து முன்னூறு பெருக்கே வழங்கப்பட்டது தகவல்கள் வெளியாகிஉள்ளது இங்கு உரையாற்றிய மகிந்த வெளிநாடுகளுக்கு போவதி தவிர்த்து கொள்ளும் படியும் இங்கு சுகமான வாழ்கையில் ஈடுபடலாம் என்றும் கூறியிருக்கின்றார். இருப்பினும் அவருடைய மகன் தமிழ் பகுதிகளில் இளைஞர்கலை திரட்டி வெளி நாடு அனுப்புவதில் மூர்க்கமாகவுள்ளார் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

                                 
வன்னியில்லிருந்து அக்கினி செய்தியாளர்  

No comments:

Post a Comment