முல்லைத்தீவு புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்த போது அங்கு எட்டியும் பார்த்திராத தென்பகுதி
சிங்கள வியாபாரிகள் போருக்கு பின்னர் இங்கு தாராளமாக நடமாடுகின்றனர்.
இராணுவத்தினரின் பூரண பாதுகாப்பு இவர்களுக்கு இருப்பதால் அச்சமின்றிப் பல
இடங்களுக்கும் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விதவிதமான பொருள்களுடன் வரும் சிங்கள வியாபாரிகள் அவற்றை எப்படியாவது இங்குள்ள மக்களின் தலையில் கட்டிவிடுவதில் குறியாக உள்ளனர்.
இவ்வாறான சிங்கள வியாபாரிகள் சிலர்
அண்மையில் முல்லைத்தீவுக்கு கோழிக்குஞ்சுகளோடு வந்தனர். மிகவும்
தந்திரமான வகையில் கோழிக்குஞ்சுகளுக்கு விதவிதமான சாயங்களைப் பூசி, அவை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்லினக் கோழிக்குஞ்சுகள்
என்று கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். இதனை நம்பி முல்லைத்தீவு மக்களும்
அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி உள்ளனர்.
எனினும் பல வர்ணங்களில் காட்சியளித்த
அந்த நல்லினக் கோழிக்குஞ்சுகள் சில நாள்களில் சாயம் வெளுத்து, வெண்மை
நிறத்துக்கு மாறிய பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்ட விடயம் மக்களுக்கு
புரிந்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் மோசடிப் பொருள்களுடன் வரும்
இத்தகைய சிங்கள வியாபாரிகளால் மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள்
தொடர்கின்றன. ஆனால் இத்தகைய மோசடி வியாபாரிகள் மீது பொலிஸாரோ, படையினரோ
நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை எனவும் மாறாக இந்த வியாபாரிகளுக்கு
படையினர் சிலர் துணை புரிந்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment