வடமராட்சிப் பிரதேசத்தில் எதிர்காலத்தில் மதுப்பாவனையற்ற, கிராமங்களை
உருவாக்குவதற்கு பருத்தித்துறை மதுவரி நிலையத்தினர் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடமராட்சியில் சட்டவிரோத மது உற்பத்தி,
விற்பனை, பாவனை போன்றவை கடந்த காலங்களை விட இந்த வருட முதல் ஆறு மாதங்களில்
பெருமளவு குறைந்துள்ளதாக மதுவரி நிலையப் புள்ளி விவரங்கள் மூலம்
தெரியவருகிறது.
மதுவரித் திணைக்களம் நடவடிக்கைஇதனைக் கருத்தில் கொண்டு மது பாவனையற்ற
கிராமங்களை உருவாக்கும் செயல்திட்டத்தினை பிரதேசரீதியில்
மேற்கொள்ளவிருப்பதாக மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி ஞா.அசோகரட்ணம்
தெரிவித்தார்.
அந்தந்தக் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் மதுப் பாவணையினால்
ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி
ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் மதுப்பாவனையற்ற கிராமங்களை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு பொதுமக்களினதும் அரச அதிகாரிகளினதும்
ஒத்துழைப்பினைக் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment