ஆறு வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு
கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் கிருலப்பனை இராம கிருஷ்ண
வித்தி யால யத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் கிருஷ்ணகுமார்
துஷாந்தினி (வயது6) ௭ன்ற சிறுமியே படுபாதகமான முறையில் படு கொலை
செய்யப்பட்டவராவார்.
வெள்ளவத்தை சித்தார்த்த வீதி புனித அந் தோனியார் தேவாலயத்தின்
திருச்சொரூப ப வ னியில் கலந்து கொண்டு விட்டு தாயா ருடன் உறவினர் ஒருவரது
வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்தச் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் படுபாதக செயலுடன் தொடர் பு டைய 16 வயதுடைய அந்தச் சிறுமியின்
உற வினரான சிறுவன் ஒருவனையும் 18 வய துடைய இளைஞன் ஒருவனையும் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சிறுமியை அழைத்துச் சென்று பாலி யல்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் கால்வாயில் தள்ளி கொலை
செய்து ள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை களில் தெரியவந்துள்ளது.
நேற்று அதி காலை கிருலப்பனைப் பகுதியிலுள்ள உள்ள கால்வாயில் சிறுமியின்
சடலம் கண்டு பிடிக்கப்பட்டதுடன் நேற்றுக் காலை குறித்த சடலம்
மீட்கப்பட்டுள்ளது.
கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம் பி க்களை பகுதியைச் சேர்ந்த
கிருஷ் ண குமார் துஷாந்தினி ௭ன்ற இந்தச் சிறுமியின் சடலம் பிரேத
பரிசோதனைக்காக நேற்றுக் காலை களுபோவில வைத்தியசாலைக்கு ௭டு த் துச்
செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவரு வ தாவது:–
கிருலப்பனை கூம்பிக்களை பகுதியில் கிரு ஷ் ணகுமாரின் குடும்பம் வசித்து
வ ருகி ன்றது. இவருக்கு 11 வயதில் ஒருமகனும், 6 வயதில் ஒருமகளும் உள்ளனர்.
வெள் ளவ த்தை சித்தார்த்த வீதி புனித அந்தோனியார் தேவஸ்தானத்தின்
திருச்சொரூப பவனி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் கலந்து
கொள்வதற்காக குறித்த சிறுமி தாயாருடன் சென்றுள்ளார்.
அந்தோ னி யார் தேவாலயத்தின் திருச்சொரூப பவனி நிறை வடைந்ததும் வீடு
செல்லும் வழி யில் சித்தார்த்த வீதியிலுள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு
தாயார் தனது ஆறு வயது மகளையும் 11 வயது மகனையும் அழை த்துச் சென்றுள்ளார்.
இந்த உறவினர் வீட்டில் இவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்த போது சிறுமி
திடீ ரென காணாமல் போயுள்ளார். உடனே பத ற் றமடைந்த தாயார் மற்றும்
உறவி னர்கள் அப்பகுதியில் அச்சிறுமியை தேடிய போதும் சிறுமியைக் காணவில்லை.
இத னை யடுத்து கிருலப்பனை பொலிஸ் நிலை யத்தில் தாயாரும் உறவினர்களும்
முறை ப் பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை அடு த்து விசாரணையினை மேற்கொண்ட
பொ லி ஸார் உறவினரான 16 வயது சிறு வனை கைது செய்து
விசாரணைக் குட்ப டு த் தி னர்.
அந்தச் சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் 18 வயதுடைய
இளை ஞன் ஒருவனும் கைது செய்யப் பட் டார். விசாரணையின் போது சிறுமியை
இவ ர்களே அழைத்துச் சென்றமை தெரிய வந் துள்ளது.
சிறுமியை அழைத்துச் சென்ற இவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட் படுத்தி கொலை செய்துள்ளமை தெரிய வ ந்துள்ளது.
நேற்று அதிகாலை கால்வாயில் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள போதிலும்,
நேற் றுக் காலை நீதிவான் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதை
அடுத்து பொலிஸாரினால் அந்த சடலம் மீட் கப்பட்டது.
சடலத்தினை தந்தையாரான கிரு ஷ்ண குமார் அடையாளம் காட்டினார். இதனையடுத்தே
பிரேத பரிசோதனைக்காக சடலம் களு போவில வைத்தியசாலைக்கு ௭டுத்துச்
செல் ல ப்பட்டது.
மகளுக்கு ஏற்பட்ட பரிதாபகரமான முடிவு குறித்து சிறுமியின் தாயாரான திருமதி கிருஷ்ணகுமார் தெரி விக்கையில்,
௭னது மகளையும் 11 வயது மகனையும் அழைத்துக் கொண்டே அந் தோனியார்
திருச்சொரூப பவனியைப் பார் ப்பதற்கு நான் சென்றேன். பவனி முடி ந்து
சித்தார்த்த வீதியிலுள்ள ௭னது மாமியார் ஒருவரின் வீட்டிற்கு நாம்
சென்றிருந்தோம்.
அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ௭னது மகள் காணாமல் போனார்.
வெளியில் ௭ங்காவது சென்றிருப்பாள் ௭ன்று தேடிப்பார்த்த போதும் அவளைக்
காண க் கிடைக்கவில்லை.
அந்த சமயம் ௭னது மாமாவின் மகனான 16 வயதுடைய
சுரே ந் திரன் வெளியிலிருந்து வீட்டுக்குள் வந் தான். அவனிடம் மகள் ௭ங்கே
௭னக் கேட் டோம். அவனோ ௭னக்குத் தெரியாது. நான் அவ ளைக் காணவில்லையென
பதில ளி த்தான். ௭னது மகள் யாருடனும் வெளியில் செல்ல மாட்டாள். மாமாவின்
மகன் ௭ன்ற படி யால் அவனுடன் தான் சென்றிரு க்க லாம் ௭னக் கருதியே நான்
அவனிடம் மகள் குறித்து வினவினேன்.
இதன் பின்னர் அவனை விசாரித்ததில் தனது மகளை அவனே வெளியில் அழைத்துச்
சென்றதாகத் தெரிவிக்கின்றனர். நான் இத்தகைய சம் ப வம் ஒன்று நடக்கும் ௭ன
சிறிதளவும் நினை த்துப் பார்க்கவில்லை ௭ன்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
25.04.2006 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ் ணகுமார் துஷாந்தினியின் படுகொலை கிரு லப்பனை பகுதியில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய செய்தி
கிருலப்பனை பிரதேசத்தில் 6 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒரு
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
சிறுமியின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களான இந்த மூன்று சந்தேக
நபர்களும், இன்றுபுதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்iனிலைப்படுத்தப்பட்ட
போது, அவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில், கொலை செய்யப்பட்ட சிறுமியின் மாமா ஒருவரும்
உள்ளடங்குவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, படுகொலை செய்யப்பட்ட சிறுமி, சந்தேக நபர்களினால், கடந்த ஒரு
மாத காலமாக பல்வேறு பாலியல் சேஷ்டைகளுக்கு உட்படுத்தப்பட்டமை, ஆரம்ப மரண
விசாரணைகள்
மூலம் தெரிய வந்துள்ளதாகவும், பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment