பிரான்சு நாட்டிடமும் பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில்சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...
தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும் ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.
இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வெச்ச பேரு சிங்சுங். அப்ப... ‘ஹோசிமின்’ அப்படிங்கற பேர் எப்படி வந்துச்சுன்னு யோசிக்கறீங்களா? ‘ஹோசிமின்’ என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர்ங்கறதால மக்கள் வெச்ச பேரு அது. அதுவே நிலைச்சுடுச்சுன்னா எந்த அளவுக்கு மக்கள் தலைவரா இருந்திருப்பாருன்னு பாத்துக்கங்க.
வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.
பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.
" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.
கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.
அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.
இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.
பிரான்ஸ் தனக்கு தோதானவங்களை வியட்நாம் அரசுல அமர்த்திட்டு அவங்களை வெச்சு பொம்மலாட்ட அரசியல் நடத்திட்டிருந்துச்சு. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேக்கற வேலையத்தான் சிறுவனா இருந்தப்ப ஹோசிமின் செஞ்சாரு. உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யறப்பவே நாட்டு விடுதலைககாக ஏதாச்சும் செய்யணும்ங்கற அழுத்தமான விதை இவர் மனசுல விழுந்துருச்சுங்க. இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினாரு. பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னால ஒண்ணும் வேலைக்காவலை. சரின்னு பிரான்ஸுக்கே போய், பாரீஸ்ல ஒரு தபால் நிலையத்துல வேலை பாத்துக்கிட்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதிச்சாங்கன்றதுல இருந்து பல தகவல்களை சேகரிசசுக்கிட்டாரு.
வியட்நாமுக்கு அவர் திரும்ப வந்தப்ப... 1940ம் ஆண்டு. அப்ப பிரான்ஸ் கிட்ட இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றிச்சு. பிரான்ஸோட கொடுமைல இருந்து விடுபட்டாச் சரின்னுட்டு வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு த்நதாங்க. ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைங்க அடிமைங்க தானே... அதனால இவங்களை விரட்டியடிச்சு நாம சுதந்திர நாடாகணும்’’ அப்படின்னு மக்கள்கிட்ட முழங்கி, எழுச்சியை உண்டுபண்ண முயன்றாருங்க ஹோசிமின். இதை வேடிக்கை பாத்துட்டிருக்க ஜப்பான் அரசு என்ன இனா வானாக்களா? இவரை நசுககிடலாம்னு முனைஞ்சது. வியட்நாமில் இருந்த அடர்ந்த காடுகள் ஹோசிமினுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவர் ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினாரு. (நோ... நோ... காட்ல இருந்த கொரில்லாக் குரங்குகளை வெச்சு இல்ல... மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குதல் நடத்துறவங்களுக்கு கொரில்லாப் படைன்னு பேரு.) அந்த கொரில்லாப் படைக்குப் பயிற்சி கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்துக்காக கொக்கு மாதிரி காத்திருந்தார்.
1945ம் வருஷத்துல ஜப்பான் மீது குண்டுகள் வீசப்பட்டு, அது கலகலத்துப் போயிருந்த சமயம்... பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றுவதற்கு முன்னால தன் கொரில்லாப் படையோட ஹோசிமின் ஜப்பானியர்களை விரட்டியடிச்சு, நாட்டைக் கைப்பத்திட்டாரு. சின்ன வயசுலருந்து அவர் வெச்சிருந்த ஆசை நிறைவேறிட்ட சந்தோஷத்தோட வியட்நாம் சுதந்திர நாடாயிட்டதா உலகத்துக்கு பறை சாற்றினாரு. கையோட தேர்தலையும் நடத்த... அவர் கட்சி ஜெயிச்சு நாட்டுக்கு அவர் தலைவரானாரு. பிரான்ஸ் கொஞ்சம் லேட்டா சுதாரிச்சுக்கிட்டு யுத்தத்துக்கு படைதிரட்டி வந்துச்சு. வியட்நாமில யுத்தம் ஆரம்பிச்சது.
போர்க் கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள்னு இப்படி சகல ஆயுத வசதிகளோடயும் இருந்த பிரான்ஸை போதிய ஆயுத வசதிகள் இல்லாத ஹோசிமின், ‘‘எங்கள்ட்ட வாலாட்டினா கடைசில தோக்கறது நீங்களாதான் இருப்பீங்க’’ன்னு எச்சரிச்சாரு. ‘ஹா... ஹா... நல்லாவே ஜோககடிக்கிறாரு இவரு’ன்னு சிரிச்சுக்கிட்டே வந்த பிரான்ஸ், ஐம்பத்தைந்து நாட்கள் நடந்த போரில, காட்டில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்த ஹோசிமின் படைகளை எதிர்கொள்ள முடியாம மண்ணைக் கவ்வுச்சு. பிரான்ஸ் இப்படி தோல்வியைச் சந்திச்சாலும் தெற்கு வியட்நாம் அதோட கட்டுப்பாட்டிலதான் இருந்து்ச்சு. வடக்கு்ப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். ‘என் நாட்டை முழுமையா மீட்டே தீருவேன்’ன்னாரு ஹோசிமின்.
பிரான்ஸ், ஹோசிமினை ஒரு கம்யூனிஸ்ட்னு சொல்லி அமெரிக்கா கிட்ட உதவி கேட்டுச்சு. கட்டப் பஞ்சாயத்துன்னா குஷியாகற, கம்யூனிஸ்ட்ன்னாலே பிடிககாத அமெரிக்கா பிரான்ஸுக்கு ஆயுத உதவி பண்ணிச்சு. வியட்நாம் பூரா குண்டு மழை, துப்பாககி சத்தம்தான். பல ஆண்டுகள் ஹோசிமின் படை பிரான்ஸுக்கு தண்ணி காட்ட, அந்த கேப்ல அமெரிக்கால மூணு ஜனாதிபதிகளே பதவி மாறிட்டாங்கன்னா பாத்துக்குங்களேன். ‘சரி, இதெல்லாம் வேலைக்காவாது’ன்னு முடிவுகட்டி அமெரிக்காவே 1965ம் ஆண்டு நேரடியா போர்ல இறங்கிச்சு. அங்க புடிச்சது அமெரிக்காவுக்கு சனி. அதுவரைக்கும் தோல்வியே காணாத அமெரிக்காவோட மூக்கை உடைச்சாரு ஹோசிமின்.
எப்படிங்கறீங்களா...? அமெரிக்கப் படைங்க இரக்கமே இல்லாம வடக்கு வியட்நாம் மேல மானாவாரியா குண்டு வீசித் தாக்க ஆரம்பிச்சது. நிறைய கொரில்லா வீரர்களை வீழ்த்தியதா கொக்கரிச்சது. உண்மையில கொரிலாக்களால நிறைய அமெரிக்க வீரர்கள் இறந்ததையும், பலர் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடினதையும் அமெரிக்கா மறைச்சுட்டது. ‘சமாதானமாப் போயிடலாமே. வடக்கு வியட்நாமை மட்டும் நீ வெச்சுக்கோ’ன்னு ஹோசிமினுக்கு தூது விட்டுச்சு. ‘சுதந்திர நாடே என் லட்சியம்’னு உறுதியா முழங்கினாரு ஹோசிமின்.
1968ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமி்ட்டிருந்த அமெரிக்கப் படைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்துல இருந்த சமயம், சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினோட படைகள் திடீர்னு வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டாங்க. அமெரிக்க தூதரக அலுவலகம் உட்பட கொரில்லாப் படையினர் கைப்பற்றிட்டாங்க. இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிச்சுக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுச்சு. கம்யூனிஸ்ட்னு சந்தேகப்படற அப்பாவி பொதுஜனங்களைக் கூட கேள்விமுறையில்லாம சுட்டுத் தள்ளினாங்க. வயசானவங்க, குழந்தைங்கன்னு எந்த இரக்கமும் பார்க்கல. அவ்வளவுதான்... அதுவரைக்கும் ஹோசிமினோட கொரில்லாப் படைகள்தான் போராடிக்கிட்டிருந்துச்சு. இப்ப பொதுமக்கள்லருந்து புத்தபிட்சுக்கள் கூட போராட ஆரம்பிச்சாங்க. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இல்லாம புத்தபிட்சுக்கள் நடுரோட்ல தங்களைத் தாங்களே எரிச்சுககிட்டாங்க. இதையெல்லாம் டி.வி.யில பாத்த அமெரிக்க ஜனங்களே, தங்கள் அரசை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க.
அப்ப எலக்ஷன் டயம்ங்கறதால ‘வியட்நாம்லருந்து படைகளை விலக்கிக் கொள்வேன்’னு உறுதிமொழி தந்து ஜனாதிபதியானாரு நிக்ஸன். (பி்னனால வாட்டர்கேட் ஊழல்ல பேர் நாறின அதே ஆசாமிதாங்க). படைகளை விலக்கிக்கற மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே, வியட்நாம் மேல தாக்குதலை தீவிரமாக்கி டபுள் கேம் ஆடினாரு அந்த பாவி மனுஷன்! ஏதோ உலகப் போர் ரேஞ்க்கு விமானங்கள் குண்டு மழை பொழிய... இடைவிடாத யுத்த பூமியாகவே தொடர்ந்தது வியட்நாம். இந்த நிலையிலதான் ஒரு பெரிய திருப்பம் வந்துச்சுங்க. 1972 மார்ச் மாசத்துல ‘நேப்பாம்’ங்கற கொடூரமான குண்டை அமெரிக்கா வீச, ஒரு வியட்நாமிய கிராமமே பத்தி எரிஞ்சுச்சு. அதுல தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றிட்டு நிர்வாணமா கதறிக்கிட்டு ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). அமெரிக்காவுலயே ஜனங்கள்ட்டருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த அதேசமயம் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டிச்சுக் குரல் கொடுத்து பாய ஆரம்பிச்சுச்சு.
கடைசியில வேற வழியே இல்லாம எல்லாத் துருப்புகளையும் வாபஸ் வாங்கிக்கிட்டாரு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன். வட வியட்நாம், தென் வியட்நாமோட இணைச்சு ஒரே சுதந்திர நாடாக மாறிச்சு. ஆனா விதியோட கொடுமையான விளையாட்டு என்னன்னா... இதைப் பாக்கறதுக்கு ஹோசிமின் உயிரோட இல்ல. அதற்கு முன்னாலேயே இறந்து விட்டிருந்தார். அவர் இறந்தாலும் அவரோட புகழ் இறக்கலை. வெற்றிக்கு அருகாமை வரை தங்களை வழிநடத்தின அந்தத் தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள் ஒரு்ங்கிணைந்த வியட்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பேர் வெச்சு கெளரவப்படு்த்தினாங்க. ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!
அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.
பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.
போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.
அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ]
அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக் கொண்டிருக்கிற)
அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது. -
Your Affiliate Money Making Machine is ready -
ReplyDeleteAnd making money with it is as simple as 1---2---3!
Follow the steps below to make money...
STEP 1. Tell the system which affiliate products the system will advertise
STEP 2. Add some PUSH BUTTON traffic (it LITERALLY takes 2 minutes)
STEP 3. Watch the affiliate products system grow your list and sell your affiliate products for you!
Do you want to start making profits?
Click here to start running the system