புகலிடம் மறுக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு
கடத்தப்பட்ட தயான் அந்தோனி எனப்படும் அன்பு என்ற நபர் குற்றப்புலனாய்வுத்
திணைக்களத்தினரின் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று 26ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தாம் அங்கம் வகிக்கவில்லை என தயான் அந்தோனி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார். இச் சந்தர்ப்பத்தில் மேலும் பேசிய அவர்,
போலி வீசாவைப் பயன்படுத்தி தம்மை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்த
முகவர், விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர் என அடையாளப்படுத்துமாறு
என்னிடம் தெரிவித்தனர்.
இலங்கை திரும்பியவுடன் விசாரணைகளின் பின்னர் பூசா தடுப்பு முகாமிற்கு
தம்மைஅனுப்பி விடுவார்கள் என கருதினேன் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
பொலிஸார் என்னை மிகவும் கௌரவமாக நடத்தினர். சுதந்திர மனிதனாக செயற்பட முடியும் என நம்பிக்கை இப்போது எனக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment