Monday, July 23, 2012

ஆப்கானிஸ்தானில் 8 நேட்டோ வீரர்கள் சுட்டுக்கொலை: ராணுவ உடையில் வந்த மர்ம நபர் வெறிச்செயல்


தலிபான் தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு இருக்கும் நேட்டோ படைகள் வருகிற 2014-ம் ஆண்டு வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நேட்டோ படை வீரர்கள் மீது தலிபான் தீவிரவாதிகளும், அவர்களது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹீரத் மாகாணத்தில் நேட்டோ படைகளுக்கு பயிற்சி முகாம்கள் உள்ளது. அங்கு ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் உடையில் ஒரு நபர் புகுந்தான்.

திடீரென அவன்தான் வைத்திருந்த துப்பாக்கியால் பயிற்சியாளர்களை சுட்டான். அதில் பயிற்சியாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தின் போது பதிலுக்கு நேட்டோ படை வீரர்களும் சுட்டனர். அதில் அந்த மர்ம நபரும் பலியானான்.

இதுதவிர ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேட்டோ படை வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில், 5 பேர் பலியாகினர். இவர்களையும் சேர்த்து தாக்குதல்களில் நேட்டோ படை வீரர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் ஹெல்மண்ட் மாகாணத்தில் இதேபோன்ற பல தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் சுட்டத்தில் நேட்டோ படையில் உள்ள 3 இங்கிலாந்து வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்

No comments:

Post a Comment