உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை
எதிர்வரும் யூலை 1ஆம் திகதியன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடத்தவுள்ள
சர்வதேச தமிழர் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறீதரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோர்
கலந்து கொள்ளவுள்ளார்கள்.
அத்துடன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜிம்.
கரிஜியானிஸ், ராதிகா சிற்சபைஈசன் மற்றும் மாகாணப் பாராளுமன்ற
உறுப்பினர்களான பாஸ். பால்கிசூன், மைக்கல் கொட்டியு ஆகியோரும் மார்க்கம்
மாநகர சபையின் 7ஆம் வட்டார அங்கத்தவர் லோகன் கணபதி ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளாரகள் என உலகத் தமிழர் பண்பாட்டு
இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம்
தெரிவித்துள்ளார்.
விழாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவர்
சிவா கணபதிப்பிள்ளை தலைமை தாங்கவுள்ளார். அத்துடன் இயக்கத்தின் சர்வதேசத்
தலைவர் வேல் வேலுப்பிள்ளை மற்றும் சர்வதேச தமிழ்க் கல்விப் பொறுப்பாளர்
வினாசித்தம்பி துரைராஜா ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
இவர்களில் நமது தாயக மண்ணிலிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
பாரளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சீ. யோகேஸ்வரன்
ஆகியோர் மேற்படி தமிழர் விழாவில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற
வகையில் கலந்து கொள்வார்கள்.
மேலும், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் முதன் முதலாக
மேற்குலக நாடொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்
பெண்மணி என்ற வகையிலும், ஜிம் கரிஜியானிஸ் கனடிய மனித உரிமைகள் மற்றும்
சுதந்திரத்திற்கான சாசனத்தை தமிழாக்கம் செய்து அதை உத்தியோகபூர்வமாக
அங்கீகரிக்கச் செய்தவர் என்ற வகையிலும் மாகாணப் பாரளுமன்ற உறுப்பினர்
மைக்கல் கொட்டியு அண்மையில் ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் தை மாதத்தை
தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கச் செய்யும் மசோதாவை சமர்ப்பித்து
உரையாற்றியவர் என்ற வகையிலும், மாநகர சபை உறுப்பினர் லோகன் கணபதி, கனடாவில்
முதன் முதலாக தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்த
பெருமைக்குரிய மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவர் என்ற
வகையிலும் மேற்படி விழாவில் கலந்து கொள்வது, கனடிய தமிழர் வரலாற்றில்
அழிக்க முடியாத சாட்சியாக விளங்கும் விழாவாக அமையும் என்றும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி விழா, 635 Middlefield Road, Scarborough (Finch &
Middlefield) என்னும் விலாசத்தில் அமைந்துளள ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய
கலாச்சார மண்டபத்தில் 01-07-2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி
இரவு 10.00 மணிவரை நடைபெறும்.
கௌரவ விருந்தினராக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர்
நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்துடன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை நடத்திய
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும்
நிகழ்ச்சியும் மேற்படி தமிழர் விழாவில் ஒரு சிறப்பு அம்சமாக விளங்கும்
என்றும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment