Wednesday, August 7, 2013

கோவில் கொள்ளையர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவும் தடை! மட்டக்களப்பினில் பரிதாபம்!

.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது




மாங்காடு மற்றும் குருக்கள் மடம் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இராணுவத்தினர் நேற்று இந்த எச்சரிக்கையை விடுத்துச் சென்றதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.இந்து ஆலயங்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் மற்றும் கொள்ளையடிப்பு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டன பேரணி ஒன்றை ஒழுங்கு செய்திருந்ததது.
எனினும் இதில் கலந்துக் கொண்டால், வெலிவேறியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்களவர்கள் தாக்கப்பட்டதை போலவே தாக்கப்படுவீர்கள் என்று இராணுவம் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் திட்டமிட்டப்படி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா, தாங்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்றும், மாறாக இந்து ஆலயங்களில் கொள்ளையிடுகின்றவர்களுக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்

1 comment:

  1. As stated by Stanford Medical, It's in fact the ONLY reason women in this country get to live 10 years longer and weigh an average of 19 kilos lighter than we do.

    (By the way, it is not related to genetics or some secret exercise and EVERYTHING to do with "HOW" they are eating.)

    BTW, What I said is "HOW", and not "WHAT"...

    Tap this link to uncover if this quick questionnaire can help you decipher your real weight loss potential

    ReplyDelete