வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழா
நடைபெறுகிறது. இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி வரை 24 நாட்கள்
திருவிழா நடைபெறவுள்ளது. தினமும் காலையிலும் மாலையிலும் நல்லைக் கந்தன்
வெளிவீதியுலா வருவார்.
10 ம் திருவிழாவான ஒகஸ்ட் 2ம் திகதி மஞ்சத் திருவிழாவும், 18ம் திருவிழாவான
கார்த்திகைத் திருவிழா ஒகஸ்ட் 10ம் திகதியும், ஒகஸ்ட் 15ம் திகதி சப்பரத்
திருவிழாவும் 16ம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளன.
16ம் திகதி 7 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில் 17ம் திகதி காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இன்றைய கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை கொன்றடி வைரவர்
கோவிலுக்கு அண்மித்த வேல்மடம் முருகன் ஆலயத்துக்கு அருகிலுள்ள
செங்குந்தரின் வீட்டிலிருந்து தேரில் பக்தர்களால் எடுத்து
வரப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment