Monday, June 25, 2012
FULL STORY கசிப்பு தயாரிப்பில் பெண் சாதனை: கைதில் முடிந்த கதை !
சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். மினுவாங்கொடை வீதி, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே நீர்கொழும்பு சுற்றாடல் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். சந்தேக நபரான பெண் மின்சாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபானம் தய�ரித்துக் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பிரிட் போத்தல் இரண்டு மற்றும் மதுபானம் தய�ரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவில் மின்சாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
gg1234
ReplyDelete