Thursday, July 19, 2012

நித்யானந்தாவுக்கு ஆண்மை சோதனை, தைராய்டு சோதனை, விந்து அணுக்கள் பரிசோதனை

கர்நாடகாவில் பிடதி ஆஸ்ரமம் நடத்தி வந்த நித்தியானந்தா மீது கடந்த 2010ம் ஆண்டு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் தொடர்ந்த் இவ்வழக்கின் விசாரணையின்போது நித்தியானந்தா தான் ஆண் அல்ல என்றும், தன்னால் உடலுறவில் ஈடுபட முடியாது என்றும் கூறியிருந்தார்.


இதையடுத்து நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை, குரல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவருக்கு சிஐடி போலீசார் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என்று ராமநகரம் கோர்ட்டில் சிஐடி அனுமதி கேட்டது. இதற்கு கோர்ட் அனுமதி வழங்கியதையடுத்து நித்தியானந்தாவுக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில் ஜூலை 30ம் தேதி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 30ம் தேதி காலை அவர் ராமநகரம் சிஐடி தலைமையகத்திற்கு வரவேண்டும். பின்னர், அவரை அங்கிருந்து பாதுகாப்புடன் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் செல்வார்கள். அங்கு, நித்யானந்தாவுக்கு ஆண்மை சோதனை, தைராய்டு சோதனை, விந்து அணுக்கள் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனையின் முடிவில் நித்தியானந்தா ஆணா? ஆண்மையற்றவரா? என்பது தெரியவரும். அவர் ஆண்மையற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டால் பாலியல் வழக்கிலிருந்து அவர் விடுதலை ஆவார் என்று சிஐடி போலீஸ் வட்டாரங்கள்

No comments:

Post a Comment